பரமக்குடி இரயில் நிலையத்தில் உலா வரும் நாய்கள் - பயணிகள் அச்சம்
பரமக்குடி இரயில் நிலையத்தினுள் நாய்கள் வலம் வருவதால் கடித்து இரத்த காயம் ஏற்படும் அபாயம் உள்ளதென பயணிகள் அச்சத்ில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரக்கூடிய பெரிய நகரம் பரமக்குடி. இந்நகரத்தில் உள்ள இரயில்வே நிலையத்தினுள் பயணிகளின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத அவல நிலையாக உள்ளது.மதுரை - ராமேஸ்வரம் இடையே பரமக்குடி இரயில் நிலையம் அமைந்திருப்பதால் சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்பட வட மாநில இரயில்களும் இந்த இரயில் நிலையம் வந்து செல்வதால் இரவு - பகல் பாராது இரயில்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
இரயிலில் சென்று, வரும் பயணிகள் நிலையத்தினுள் நடந்து வருவதற்குள் அங்கு கும்பலாக முகாமிட்டு வலம் வரும் நாய்கள் தொல்லையை கண்டு கடித்து இரத்த காயம் ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளது என அஞ்சி நடுங்குகின்றனர்.எந்த நேரம் , என்ன நடக்குமோ ? என்ற அச்ச உணர்வுடனேயே, தங்களது சிறு குழந்தைகள், முதியவர்களை அழைத்துக் கொண்டு மனதில் திக் ... திக் ... திக்கென்ற ... ஒரு விதமான பயத்துடன் பயணித்து வருவது வழக்கமாக உள்ளது.வருங்காலங்களிலாவது பயணிகளின் நலன் கருதி இரயில் நிலையத்திற்குள் நாய்கள் நுழைந்து வந்து வலம் வராதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து பயணிகளின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென பயணிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்