டிச.3 ல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற டிச.3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் 03.12.24 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்திடபெறவுள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் (UYEGP) வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், (PMEGP) பராத பிரதமரின் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டம், மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வீடு கட்ட வட்டியில்லா வங்கி கடன்.
ஆவின் பாலகம் வழங்கும் திட்டம், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகள் வேறு திட்டங்களுக்கு விண்ணபிக்க வேண்டுவோர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகிய ஆவணங்களுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்