advertisement

பத்திரிகையாளர் முகமது சுபைருக்கு கனிமொழி எம்பி., ஆதரவு

நவ. 28, 2024 11:20 முற்பகல் |

 

'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் முகமது சுபைர் மீம்பது தேச இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பதாக உத்தர பிரதேச காவல்துறையில் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிராக திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி அறக்கட்டளையின் பொதுச் செயலாளரான உதிதா தியாகி, நரசிங்கானந்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் முகமது சுபைர் பேசுவதாக அவரது பழைய வீடியோவை வெளியிட்டு குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், அந்த புகாரின் பேரில் காசியாபாத் போலீசார் கடந்த மாதம் முகமது சுபைர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், எப்ஐஆரில் தேச இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பதான கடுமையான பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளரும், 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனருமான முகமது சுபைர் மீது தேச இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பதாக உத்தர பிரதேச காவல்துறையில் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிராக திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில், '' உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் முகமது சுபைர் மீது உத்தரப் பிரதேச காவல்துறை, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பதாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த செயல் பிரித்தாளும் சக்திகளுக்கு எதிராக அஞ்சாமல் போராடுபவர்கள் குரலை ஒடுக்க வைக்கும் முயற்சி ஆகும்.

இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட பிரிவு 'BNS 152', ஊடக சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு எதிராக சட்டம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, சுதந்திரமான பத்திரிக்கைக்கு எதிரான மிரட்டலுக்கு எதிராகக் குரல் எழுப்புமாறு பேச்சுரிமையில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்'' என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement