advertisement

தூத்துக்குடியில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை: மேயர் தகவல்

நவ. 28, 2024 11:48 முற்பகல் |

 


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் ஜெகன்  கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். 

பின்னர் மேயர் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காதவாறு போர்க்கால கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முள்ளக்காடு உப்பாத்து ஓடை தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் மழைநீர் தேங்காது. மழையில் சேதமான சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.  என்றார்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement