கமுதியில் வளர்ச்சித் திட்டப்பணிகளை இராமநாதபுரம் கலெக்டர் நேரில் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கமுதி வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், அரசு நலத்திட்ட உதவிகள் , பயனாளிகளுக்கு சென்றடைவது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
ய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கமுதி, அபிராமம், பசும்பொன், கிளாமரம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், கமுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கமுதி கோட்டைமேடு பகுதியை பார்வையிட்டு மழைநீர் தேங்காமல் வடிகால் வாய்க்காலில் செல்லும் வகையில் சீரமைப்பதுடன் தொடர்ந்து கண்காணித்திட வேண்டுமென அறிவுறுத்தியதுடன், மழைக்காலங்களில் பெறக்கூடிய தண்ணீர் கண்மாய், குளங்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். கண்மாய், குளத்தில் தண்ணீர் தேங்குவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன் மூலம் வறட்சி காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க பயனுள்ளதாக இருக்கும் என அலுவலர்களை அறிவுறுத்தினார்
பின்னர், கமுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கிட்டங்கிற்கு சென்று உணவுப் பொருட்களின் தரம் , இருப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, என்.வி.எஸ்.புரம், கிளாமரம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறையின் மூலம் மானிய திட்டத்தில் வேளானர் இடுபொருள்கள் பெற்று விவசாய பணிகள் மேற்கொண்டு வந்த முன்னோடி விவசாமி ராமரின் தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டு அதன் சிறப்பு , பயன்கள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.
மேலும் , கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அரசின் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன் ஒவ்வொரு துறை அலுவலரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கமுதி வட்டத்தை ஆய்வு செய்து அதன் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை கண்டறிந்தால் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதுடன், இத்திட்டத்தின் நோக்கம் அரசு வழங்கும் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் ஒவ்வொரு துறை அலுவலரும் தங்கள் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை மேற்கொள்ள வேண்டுமென அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களை சந்தித்து பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெற்று மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். பின்னர், அபிராமத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியினை பார்வையிட்டு உணவு பொருட்களை சுகாதாரமான முறையில் வழங்கிட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து மாணவர்களிடம் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.
ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு , பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தமிழ்செல்வி, கமுதி வட்டாட்சியர் காதர் முகைதீன், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்