advertisement

கோவில்பட்டி அருகே 10 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

நவ. 28, 2024 9:24 முற்பகல் |

 

கோவில்பட்டி அருகே மினி லாரியில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர்  பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து கயத்தாறு தாசில்தார் சுந்தரராகவன் தலைமையில்  வருவாய்த் துறையினர்  சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளாலங்கோட்டை பகுதியில் சென்ற மினி லாரியை சோதனையிட முயன்ற போது, மினி லாரி நிற்காமல் வேகமாக சென்றதாம்.

அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்ற நிலையில் அங்குள்ள கோவில் முன்பு மினிலாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் லாரியில் இருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்‌ இதையடுத்து அதிகாரிகள் சோதனை செய்த போது லாரியில் சுமார் 40 கிலோ  எடையுள்ள 250 பைகளில் சுமார் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.  இந்த ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 10டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு உதவி ஆய்வாளர் அரிக் கண்ணனிடம் ஒப்படைத்தனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement