தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆய்வுக்கூட்டம்
ஏப். 14, 2025 6:12 முற்பகல் |
தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
கடந்த 11 ம் தேதி தமிழக சட்டம் ஒழுங்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் துாத்துக்குடி நகரிலுள்ள அனைத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள், ஏஎஸ்பி., மற்றும் மாவட்ட எஸ்பி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் துாத்துக்குடி சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், சட்டம் ஒழுங்கு குறித்து போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை வழங்கினார். மேலும் டவுன் ஏஎஸ்பி அலுவலகத்தில் உள்ள காேப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்டு கோப்புகள் சிறப்பாக பராமரிக்கப்படுவதாக பாராட்டினார்.
கருத்துக்கள்