advertisement

அமெரிக்க வெள்ளை மாளிகையில் விமர்சையாக நடந்த தீபாவளி கொண்டாட்டம்

அக். 30, 2024 10:46 முற்பகல் |

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கா எம்பிக்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என 600க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளை மாளிகையின் நீல அறையில் தீபத்தை ஏற்றி வைத்த ஜோ பைடன், “ஜனாதிபதி என்ற முறையில், வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீபாவளி விருந்து நிகழ்ச்சியை நடத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு பெரிய விஷயம். தெற்காசிய சமூகம், கமலா ஹாரிஸ் முதல் டாக்டர் மூர்த்தி வரை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலர் எனது நிர்வாகத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அமெரிக்காவில் இப்படியொரு சிறப்பான நிர்வாகத்தை கொண்டிருப்பதன் மூலம் நான் எனது உறுதிப்பாட்டைக் கடைபிடித்துள்ளேன் என்பதற்கு பெருமை கொள்கிறேன்'' என்றார்.

தொடர்ந்து இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட புலம்பெயர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அதிபர் ஜோ பைடன், தெற்காசிய அமெரிக்க சமூகம், அமெரிக்க வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் வளப்படுத்தியுள்ளது. உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூகம் நீங்கள். இப்போது, ​​வெள்ளை மாளிகையில் தீபாவளி வெளிப்படையாகவும், பெருமையாகவும் கொண்டாடப்படுகிறது என்றார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement