advertisement

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

அக். 24, 2024 10:15 முற்பகல் |

 

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை முறையாக கையாள்வது, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது என்று வலியுறுத்தினார்.

 பிரதமர் நரேந்திர மோடி கசானில் நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே,சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் 2020-ம் ஆண்டில் எழுந்த பிரச்சனைகளுக்கு தீர்வு, படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதற்கான சமீபத்திய ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர் மோடி,வேறுபாடுகள் மற்றும் மோதல்களை முறையாக கையாள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.
உத்தி சார்ந்த தகவல் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பைக் கண்டறிய வேண்டும் என்றும் தலைவர்கள் உறுதிபூண்டனர். 

இருதலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "இரு நாடுகளை சேர்ந்த சிறப்பு பிரநிதிகள் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இருதரப்புக்கும் ஏற்ற தேதியில் சந்தித்துப் பேசுவார்கள். இரு நாடுகளுக்கு இடையேயான உத்திப்பூர்வ தகவல் தொடர்புகளை அதிகாரிகள் முன்னெடுத்து செல்வார்கள். அதிகாரப்பூர்வ முறைகளின் மூலம் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது,"என்று கூறினார்.2014ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் இதுவரை 20 முறை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement