advertisement

கார் பந்தயத்தில் என்னை அனுமதித்ததற்கு நன்றி -  மனைவிக்கு நன்றி சொன்ன அஜித்!

ஜன. 13, 2025 5:44 முற்பகல் |

 

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.

சமீபத்தில் ’அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் ரேஸிங் அணியை உருவாக்கிய நடிகர் அஜித்குமார், தன்னுடைய அணியுடன் சேர்ந்து அடுத்தடுத்து நடக்கவிருக்கும் கார் பந்தயங்களில் அடுத்த 9 மாதங்களுக்கு பங்கேற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் தகுதிச்சுற்றில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. அதில் 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித்குமார் ரேஸிங் அணி, 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. அந்த வெற்றியை அணியுடன் சேர்ந்து அஜித்குமார் துள்ளிக்குதித்து கொண்டாடினார்.துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி, போர்ஷே 992 கப் கார் (எண் 901) ரேஸ், போர்ஷே கேமன் GT4 (எண் 414) ரேஸ் என இரண்டு பிரிவுகளில் பங்கேற்றது. இதில் GT4 ரேஸில் மட்டும் அஜித் ஓட்டுநராக பங்கேற்றார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement