advertisement

தருவைக்குளம் கடற்கரை பகுதியில் தூத்துக்குடி எஸ்பி ஆய்வு

ஏப். 04, 2025 3:28 முற்பகல் |


 

தூத்துக்குடி தருவைக்குளம் கடற்கரை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி  மாவட்ட எஸ்பி., ஆல்பர்ட் ஜான்  தருவைகுளம் கடற்கரை பகுதியில் ரோந்து மேற்கொண்டு அங்குள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், சந்தேகப்படும்படியாக அந்நிய நபர்கள் ஊருக்குள் சுற்றித் திரிந்தாலோ அல்லது சட்ட விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டாலோ காவல் துறையினருக்கு தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement