advertisement

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கன மழை

ஏப். 04, 2025 3:16 முற்பகல் |

 

தூத்துக்குடியில் நேற்றிரவு (ஏப் 3 )கன மழை பெய்தது.  

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. மேலும் இரவு முழுவதும் நீடித்த சாரல் மழையால், சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement