advertisement

கூட்ட நெரிசலை தவிர்க்க 3 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஏப். 15, 2025 10:12 முற்பகல் |

 

கோடை காலம்  கடும் வெயில் தொடங்கியதையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய அறிவிப்பு  ஒன்றை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.அதில்  3 வாராந்திர சிறப்பு ரெயில்களின் கால அளவு மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது,"நாகர்கோவில் - தாம்பரம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06012) மே 11-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை கூடுதலாக 4 வாரம் இயக்கப்படும்.

இதேபோல், மறுமார்க்கத்தில் தாம்பரம் - நாகர்கோவில் இடையே வாரந்தோறும் திங்கட்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06011) மே 12-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு இடையே வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06035) மே 9-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

திருவனந்தபுரம் வடக்கு-தாம்பரம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06036) மே 11-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

மேலும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06030) மே 11-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06029) மே 12-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை மேலும் 4 வாரம் நீட்டிக்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement