advertisement

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏப் 4 ல் விடுமுறை அறிவிப்பு

ஏப். 03, 2025 12:08 பிற்பகல் |

திருஉத்தரகோசமங்கையில் 04-ந்தேதி மகா கும்பாபிஷேகத்தையொட்டி ராமநாதபுரம் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது :பொது (பல்வகை) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண்.1537 பொது(பல்வகை)த் துறை நாள்: 03.04.2025-ன்படி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவில் மகாகும்பாவிஷேகம் விழா 04.04.2025 (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதால், அன்று ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் (அரசு பொதுத்தேர்வு  கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) "உள்ளூர் விடுமுறை" ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 10.05.2025 அன்று சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாலணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 04.04.2025 அன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் , அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement