சித்திரை 1 அன்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் மௌன விரதம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழ் புத்தாண்டு – சித்திரை 1 அன்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மௌன விரதம் இருந்ததை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
சித்திரை 1 அன்று மௌன விரதம் இருந்த முதல்வர், ஜனவரி 1 அன்று உற்சாகமாக புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்தது தமிழர்களை அவமதிக்கும் செயல் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு கீழ்த்தரமான செயல் என்றும், தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதல்வரை தமிழகம் புறக்கணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலின் மீது தொடர் விமர்சனங்களை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:
"ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கின்ற நேரத்தில், 'தமிழ் மொழியின் காவலன்' என தன்னை விளம்பரப்படுத்தும் முதல்வர், நண்பகல் கடந்தும் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்காமல் புறக்கணித்துள்ளார்."
மேலும், கடந்த ஆண்டுகளின் போல் இந்த ஆண்டும் 'ஆவின்' பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் இடம்பெறாததையும் அவர் குறிப்பிடினார். இதுவும் தமிழக அரசு தமிழ் புத்தாண்டை அலட்சியமாக அணுகுவதை காட்டுவதாக அவர் கூறினார்.
"தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் திமுக" என தங்களை விளம்பரப்படுத்தும் அவர்கள், தமிழ்ப் புத்தாண்டை அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, "தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு, வரவிருக்கும் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் கனமான பாடம் கற்றுக் கொடுக்கப்படும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துக்கள்