வணிக பயன்பாடு சிலிண்டர் விலை குறைப்பு
ஏப். 01, 2025 3:50 முற்பகல் |
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.43.50 குறைந்து ரூ.1921.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் வணிக சிலிண்டர் ரூ.1965க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்