ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு
மார். 31, 2025 4:11 முற்பகல் |
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சந்தைகள் நாள் முழுவதும் திறந்திருக்கும்.பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறுதைத் தடுக்க ஜம்மு - காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர்.
ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்