அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன் - ஈபிஎஸ் அளித்த விளக்கம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன் என்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன் என்பதை டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அதில், "தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டுச் சென்றோம். இன்றைக்கு பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி காலதாமதமாகியுள்ளது. அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை அவரிடம் கோரிக்கை விடுத்தோம். குறிப்பாக 100 வேலை திட்டத்துக்கு வரவேண்டிய நிலுவை தொகை, கல்வித் துறைக்கு விடுவிக்க வேண்டிய தொகை குறித்தும் கோரிக்கை வைத்தோம்.
அப்போது அரசியல் ரீதியாக அமித் ஷாவிடம் பேசினீர்களா என்றும், அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அப்படி எதுவும் இல்லை. முழுக்க முழுக்க மக்களின் பிரச்சினைகளுக்காக இங்கு வந்திருக்கிறேன். தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. கூட்டணி குறித்த செய்திகள் எல்லாம் பரபரப்புக்கு தான் பயன்படும். மக்கள் பிரச்சினை பேசுவதற்கே அமித் ஷாவை சந்தித்து பேசினோம்.
கருத்துக்கள்