advertisement

மக்களவையில் பெரியார் குறித்து பேசிய நிதியமைச்சர் - திமுக எம்.பி.,கள் வெளிநடப்பு

மார். 12, 2025 4:02 முற்பகல் |

மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு ஆளும் கூட்டணி எதிர்க்கட்சிகளை அவமரியாதை செய்வதாக கடும்கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

மாநிலங்களவையில் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையான நிலையில் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பேசுபொருளானது. குறைவான கடன் விகிதத்தில் மத்திய அரசை விட தமிழக அரசு சிறந்து விளங்குவதாக திமுக எம்பி அருண் நேரு பேசியிருந்த நிலையில் அதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தாமத்திய அரசிற்கு பாதுகாப்பு உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகள் உள்ளதாகவும் எனவே மாநில அரசின் கடன்சுமை விகிதங்களுடன் மத்திய அரசின் கடன் விகிதங்களை ஒப்பிடுவது சரியல்ல என விளக்கினார். மேலும் தமிழ்நாட்டில் கல்வித்துறையில் மாணவர்கள் கற்றல் திறன் குறைவாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

மேலும், திமுக எம்பிக்கள் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில் அவரது பேச்சை திரும்ப பெற வைத்தீர்கள். ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறியவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும் மாலை போட்டு வைத்துள்ளீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.இதன் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement