தருவைகுளத்தில் கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரம்!
ஏப். 08, 2025 10:42 முற்பகல் |
தருவைகுளத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாயக் கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சி, சமூகம், மதம், சங்கம் சார்ந்த அனைத்து கொடிக் கம்பங்களையும் 10.04.2025 தேதிக்குள் தங்கள் சொந்த செலவில், எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் உள்ள அரசியல் கட்சி மற்றும் சமுதாயக் கொடி கம்பங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கருத்துக்கள்