தூய இம்மானுவேல் ஆலயத்தில் சேகர பெண்கள் பண்டிகை
தூத்துக்குடி மாவட்டம் CSI தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் தங்கம்மாள்புரம் சேகரத்தை சார்ந்த ஜெபஞானபுரம் சபை தூய இம்மானுவேல் ஆலயத்தில் வைத்து 2025 ஆம் ஆண்டிற்கான சேகர பெண்கள் பண்டிகை நடைபெற்றது.
காலை 8 மணிக்கு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.பேருரணி சேகர ஆயர் ஆமோஸ் அவர்கள் திருவிருந்து மற்றும் பண்டிகை ஆராதனையை நடத்தி தேவ செய்தி அளித்தார்கள். பின் தங்கம்மாள்புரம் சேகரத்தைச்சார்ந்த தங்கம்மாள்புரம் ஜெபஞானபுரம்,மாயகூத்தபுரத்தை சார்ந்த தாய்மார்கள் பவனி ஊர்வலமாக சென்றனர். இந்த பெண்கள் பண்டிகை சிறப்பு குடுகையில் திருமதி .சசிலதா அகஸ்டின் கோயில் ராஜ் அவர்கள் கலந்து கொண்டு தேவசெய்தி அளித்து மற்றும் ஆலோசனைகளை அளித்தார்கள். சபை சார்பில் சிறப்பு பாடல்களை பெண்கள் பாடினர். இந்நிகழ்வில் வேதாகம தேர்வு மற்றும் போட்டிகள் நடைபெற்றது.
வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இந்த பண்டிகை நிகழ்வை சாயர்புரம் GUபோப் சபை மன்ற தலைவர் மற்றும் தங்கம்மாள்புரம் சேகர பொறுப்பு ஆயர் கனம் அகஸ்டின் கோயில் ராஜ் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். சபை ஊழியர் சம்பத் மற்றும் ஜெபஞானபுரம் சபையார் உற்சாகமாக பங்குபெற்றார்கள்.ஜெபஞானபுரம் தாய்மார்கள் இந்த நிகழ்வை நடத்தினார்கள்.இது தங்கம்மாள்புரம் சேகர பெண்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்