போர்கால அடிப்படையில் 3 மின்கம்பங்கள் அமைப்பு - முன்னாள் உபதலைவர் நன்றி
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியை சார்ந்த செந்தியம்பலத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் விநியோகிக்கபடுகிறது.மேலும் இப்பகுதியில் தற்போது பல புதிய குடியிருப்புகள் அமைந்து வருகின்றது. நெசவாள பெருமக்கள் வாழும் நிலையில் மின்சார தேவையும் நாளுக்கு நாள் அதுகரித்து வருகின்றது.
இந்நிலையில் முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா அவர்கள் செந்தியம்பலம் பகுதியில் கூடுதல் மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.மேற்கண்கோரிக்கைக்கு பதிலாக செந்தியம்பலத்தில் பகுதியில் அதிக மின் அழுத்தம் டிரான்ஸ்பார்மரில்(over load) கண்டறிபட்டு செந்தியம்பலம் மற்றும் ரைட்டர் விளை பகுதியில் கூடுதல் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என சாயர்புரம் உதவி மின் பொறியாளர் அளித்துள்ளார். மேலும் செந்தியம்பலம் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ஹேமா ஆனந்தராஜ் கடந்த வருடம் செந்தியம்பலம் பகுதியில் தாழ்ந்த நிலையில் மின்வயர்கள் சென்ற பகுதிகளை ஆய்வு செய்து வாதிரியார் சங்கம் அருகிலும் சி.எஸ்.ஐ பாதிரியார் இல்ல பின்புறம் உள்ள தெருவிலும் கூடுதல் புதிய மின்கம்பங்கள் அமைக்கபட்டது.
ரைட்டர் விளை பகுதியில் தாழ்ந்த நிலையில் தரையில் இருந்து 7 அடி உயரத்தில் சென்ற ஆபத்தான மின்வயர்கள் மாற்றப்பட்டுள்ளது.மேலும் ஆபத்தாக உயர் அழுத்த மின் வயர்கள் வீட்டில் மேல் சென்ற பகுதியான தேரிச்சாலை பகுதியில் பழைய பழுதடைந்த கம்பம் மாற்றி புதிய மின்கம்பம் அமைக்கபட்டது. மால் தெருவில் சுமார் 5 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த மின்கம்பம் மாற்றப்பட்டது.இந்நிலையில் கூடுதல் மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க மின்வாரியத்தில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது இப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது பற்றி முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா குறிப்பிடுகையில் எம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் பொதுமக்களின் மின்சார தேவையை கணக்கில் கொண்டு பொதுமக்கள் சார்பாக முதல்வர்ஸ்டாலின், கனிமொழி எம்.பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோரிடம் பல்வேறு கோரிக்கை அளித்தோம்.
அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சார்பாக மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் 40 வருட கனவான ஏரபோர்ட் சாலை வழியாக மாற்றுவழித்தடம் அமைக்கப்பட்டு பணி நிறைவு பெரும் நிலையில் உள்ளது .மேலும் இதுவரை தங்கம்மாள்புரம் சக்கம்மாள்புரம் பகுதியில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து தரப்பட்டுள்ளது.மேலும் சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் விவசாய சங்கம் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் உள்ள கூடுதல் சுமையை நீக்கி அதன் அருகில் தங்கம்மாள்புரம் செல்லும் மின் பாதையில் கூடுதல் 63 KV மற்றும் சிவஞானபுரம் மக்களுக்காக தேரிபகுதியில் கூடுதல் 63 KV மற்றும் சக்கம்மாள்புரம் பகுதியில் விவசாய பகுதிக்கு கூடுதல் 63 KV அமைக்க பொதுமக்கள் சார்பாக மனு அளித்துள்ளேன். மற்றும் காமராஜர் நகர் நம்மாழ்வார் நகர் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரை ஆய்வு செய்ய மனு அளித்துள்ளோம்.
தாழ்ந்த நிலையில் 3 தெருவில் ஆபத்தான நிலையில் மின்சார வயர்கள் சென்ற காமராஜர் நகரில் போர்கால அடிப்படையில் 3 மின்கம்பம் அமைக்கப்பட்டு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.மற்றும் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியிலும் சப்பரம் செல்லும் வழியில் கூடுதல் மின்கம்பம் நட்டப்பட்டது.எம் ஊராட்சியை மின் மிகை ஊராட்சியாக மாற்றுவது எம் மக்களின் கனவு அதை நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கருத்துக்கள்