advertisement

திருப்பூரில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

ஏப். 17, 2025 3:21 முற்பகல் |

 

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் போலீசாருக்கு கஞ்சா கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் திருப்பூர் ரெயில் நிலையம் முன்புறம் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் விதமாக 2 பேர் வந்துள்ளனர்.

அவர்களைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்களிடம் சுமார் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேனி பெரியகுளத்தை சேர்ந்த அஜ்மல்கான், வேடசந்தூரை சேர்ந்த கன்னியப்பன் என்பது தெரியவந்தது. 

மேலும், அவர்கள் இருவரும் வெளியூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement