advertisement

நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்!

ஏப். 17, 2025 3:10 முற்பகல் |

 

நெல்லை நாங்குநேரி மாணவன் சின்னத்துரையிடம் பழகி வசந்தம் நகர் அருகே வரவைத்து 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த மாணவன் சின்னதுரை தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் முனியாண்டி, அம்பிகாபதி. இத்தம்பதியரின் மகன் சின்னதுரை (18). . கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் படித்த அதே பள்ளியைச் சேர்ந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர், சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து, அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற தங்கையையும் வெட்டினர்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குணமடைந்த அவர் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியும் அடைந்தார். சிகிச்சை பெற்று வந்த போது மருத்துவமனைக்கு சென்று ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தனர். அத்தனை தடைகளையும் கடந்து பொதுத்தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். அவரது உயர்கல்வி செலவு முழுவதும் அரசு ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் தெரிவித்தார். தற்போது பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இத்தகைய சூழலில் தான் மீண்டும் சின்னதுரை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சின்னதுரை தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், “சின்னதுரைக்கு பெரிய அளவில் காயம் இல்லை. சிறிய காயம் மட்டுமே. இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement