பரமக்குடி அன்னதானத்தில் நிகழ்ந்த சமூக நல்லிணக்கம்
பரமக்குடி ஆயிரவைசிய செட்டியார் சமூக சேவை சங்கம் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை சமூக நல்லிணக்கத்தை வித்திட்டும் ... வலியுறுத்தி வரும் டாக்டர் அ. முகமது அலி ஜின்னா தொடங்கி வைத்து உணவு சாப்பிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் மத்தியில் மக்களின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா 11 - நாள்கள் கோலாகலமாக நடைபெற்றது.திருவிழாவின் சிகர நிகழ்வாக அக்னிசட்டி ஊர்வலமும், முத்தாய்ப்பாக, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட பால்குடத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி,பரமக்குடி ஆயிர வைசிய செட்டியார் சமூக சேவை சங்கத்தின் 14-ம் ஆண்டு அக்னிசட்டி, பால்குடத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிலையில், சங்கத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு, ஆயிரவைசிய செட்டியார் சமூக சேவை சங்க தலைவர் அம்பலம் ஆர்.ரமேஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பி.எஸ்.பாண்டியராஜன் உள்பட சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்க துணைத் தலைவர் பா.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.விழாவில், சமூக நல்லிணக்கத்திற்கு வித்திட்டும்... வலியுறுத்தி வருபவரும் ... பற்பல சேவைகள் புரிந்து வரும் எமனேஸ்வரம் தங்கம்மாள் - ரஹீம் அறக்கட்டளை நிறுவனரும், " சட்ட களம் " தினசரி நாளிதழின் ஆசிரியர் டாக்டர் அ.முகமது அலி ஜின்னா அன்னதானத்தை தொடங்கி வைத்து குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பக்தர்களுடன் தானும், தன்னுடன் வந்திருந்த உறவுகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டது , அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் மகிழ்ச்சியையும் ... பாராட்டையும் ... பெற்று சிறப்புற நிகழ்வு பெற்ற விழாவாக அமைந்திருந்தது.
விழாவில், அ.ம.மு.க. பரமக்குடி நகர் அவைத் தலைவர் என். சீனி முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்.பி.ரஞ்சித்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பரமக்குடி ஆயிரவைசிய செட்டியார் சமூக சேவை சங்க தலைவர் ஆர்.ரமேஷ் , துணைத் தலைவர் பா.செந்தில்குமார், பொதுச் செயலாளர் பி.எஸ்.பாண்டியராஜன் உள்பட சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்