advertisement

பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரியம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்

ஏப். 14, 2025 6:59 முற்பகல் |

பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரியம்மனுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி ... பராசக்தி ... என பக்தி பரவசத்துடன் சுட்டெரிக்கும் வெயிலில் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரின் மத்தியில் நகர் மக்களின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ முத்தால பரமேஸ்வரியம்மன் கோவிலின் பங்குனித் திருவிழா கடந்த 02 -ந்தேதி (புதன்) காப்பு கட்டுதல், 03 -ந்தேதி (வியாழன்) கொடியேற்றத்துடன் தொடங்கியது.11-நாட்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் 11 -ம் நாள் திருவிழாவாக 13-ந் தேதி (ஞாயிறு) முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தங்களது நேர்த்திக் கடனாக  பால்குடம் ஏந்தி, அழகு குத்தி, இளநீர் காவடி எடுத்தும் ஓம்சக்தி ... பராசக்தி ... என பக்தி பரவசத்துடன் சுட்டெரிக்கும் வெயிலிலும் மதுரையார் பால்குட சங்கம், ஆயிர வைசிய இளைஞர் சங்கம், ஆயிர வைசிய சமூக நலச் சங்கம், வன்னியகுல சத்திரிய மகாசபை, தெலுங்கு விஸ்வகர்மா சபை, பாகம்பிரியாள் பாதயாத்திரை குழுவினர், ஆயிர வைசிய மறுமலர்ச்சி பேரவை, ஆயிர வைசிய செட்டியார் சேவை சங்கம், விஸ்வகுல ஆசாரிகள் சங்கம் உள்பட அனைத்து சமுதாய சங்கத்தின் சார்பில் வைகையாற்றில் பால்குடம் குடம் கட்டி அங்கு இருந்து புறப்பட்டு, பெரிய கடைவீதி, பூக்கடை பஜார், பெருமாள் கோவில் பகுதி, லெனின் தெரு, நகைக்கடை பஜார், காந்திசிலை பகுதி, கல்பட்டறை பகுதி, எல்லைப்புற காந்திஜி தெரு, சென்குப்தா தெரு, காய்கறிகடை பகுதி, கோவிலின் பால்குடம் ஊர்வலம் வந்த பாதையின் இருபுறமும் பெருந்திரளாக பெண்கள், ஆண்கள், குழந்தைகள், பொதுமக்கள் கூடி நின்று வணங்கியும், நேர்த்திக் கடன் செலுத்துபவர்களின் உடலில் தண்ணீர் ஊற்றியும் வழிபட்டனர்.

அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அம்பாளுக்கு மஞ்சள் பொடி, சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம்,திருநீறு, பழவகைகள் என 21 வகையான சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெற்றது. அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்து
சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.  ல்குடம் ஏந்திய பக்தர்கள் மாவிளக்கு வைத்து அம்பாளை தரிசித்து வழிபட்டனர்.ருவிழாவின் சிகர நிகழ்வாக இரவு பலவர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் அம்பாள் சயன கோலத்தில் காட்சி தந்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆயிர வைசிய சபை தலைவர் ராசி என்.போஸ், துணைத் தலைவர் எஸ்.பாலுச்சாமி, செயலாளர்கள் வி.எஸ்.என்.செல்வராஜ், எஸ்கேபி இலெனின்குமார், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்பட சபை நிர்வாகிகள், நியமன உறுப்பினர்கள், ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வராள் - ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரியம்மன் கோவில் டிரஸ்டிகள் அம்பலம் மு.அ.பா.ஜெயராமன், ந.அ.செ.ஸ்ரீ. வா. ரவீந்திரன், மானேஜிங் டிரஸ்டி ந.அ.சி. ந.சோ.பாலசுப்பிரமணியன் ஆகியோரும் . சங்கத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement