நயினார்கோவிலில் வளர்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம், தேத்தாங்கால் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.30.80 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், மும்முடிச்சாத்தான் ஊராட்சி ஒன்றியத்துவக்கப்பள்ளியில் ரூ.28.90 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், ஆதிதிராவிடர் காலணியில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நாடக மேடை பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பாண்டியூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நிறைவு பெற்ற ஊராட்சி செயலக கட்டடம் , பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டத்தினையும் பார்வையிட்டார். மேலும் , அங்கே நடைபெற்று வந்த நியாய விலைக்கட்டடிம் கட்டுமான பணியினை பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பகைவென்றி கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் பணியினை பார்வையிட்டார். பகைவென்றி கிராமத்தில் உள்ள மாவட்ட நர்சரி பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் நாற்றுகள் குறித்து பார்வையிட்டு திறம்பட பராமரிக்க வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின் போது , நயினார்கோவில் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் அ.தேவபிரியதர்சினி, உதவிப்பொறியாளர்கள் கணபதி சுப்பிரமணியம் , ஜெயந்தி , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உட்பட அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்