advertisement

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 82-ஆக உயர்வு

ஜன. 04, 2024 11:24 முற்பகல் |

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. 

இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. இதனால் அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள் குலுங்கின. அதன் பிறகும், தொடா்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்களும், நில அதிா்வுகளும் தொடா்ந்தன. 

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறினா். இது தவிர, பலர் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 51 போ் மாயமாகியுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement