கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்து - மருத்துவர் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு
கயத்தாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வள்ளியூரை சேர்ந்த மருத்துவ தம்பதியினர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த மருத்துவர் ரவீந்திரன் (62). இவரது மனைவி ரமணி (59). இவரும் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர்கள் இணைந்து வள்ளியூரில் மருத்துவமனை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று காலை ரவீந்திரன், தனது மனைவி ரமணி, தனது தாய் சேர்மத்தாய் (82) ஆகியோருடன் சிவகாசியில் உள்ள உறவினர்களை சந்திக்க காரில் சென்றார். பின்னர் மதியம் 3 பேரும் வள்ளியூருக்கு காரில் புறப்பட்டனர். காரை ரவீந்திரன் ஓட்டினார்.
கயத்தாறு சுங்கச்சாவடிக்கு முன்பு வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மணலில் கவிழ்ந்து உருண்ட தில், சம்பவ இடத்திலேயே ரவீந்திரன், ரமணி, சேர்மத்தாய் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து கயத்தாறு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு, பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்