அண்ணாமலை தினமும் ஒரு பொய் சொல்லி திரிகிறார் - தூத்துக்குடி பிரச்சாரத்தில் கி.வீரமணி பேச்சு
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதாித்து திராவிடர் கழகம் சார்பில் சிதம்பரநகர் விலக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர்கள் பால்ராசேந்திரம், காசி, பகுத்தறிவு கழக மாவட்ட தலைவர் வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் பொன்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில தலைவர் கி.வீரமணி பேசுகையில் தந்தை பொியார் காலத்தில் கூட்டத்திற்கு மக்கள் வரவில்லை என்பதைப்பற்றி கவலைப்படாமல் குறைவானவர்கள் வந்தாலும் நாம் சாியான நேரத்திற்கு செல்ல வேண்டும் நமது கொள்கைகள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றினார். அவரது வழியில் நாம் பயணிக்கிறோம். 10வயது மாணவ பருவ முதல் 80 ஆண்டுகாலம் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன்.
பாஜக ஆர்எஸ்எஸ் காெள்கையான ஒரே நாடு ஓரே தோ்தல் என்பதற்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும். 140 கோடி இந்தியர்களுக்கும் நான் பாதுகாவலன் என்று கூறி கொள்ளும் மோடி இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கொடூர சம்பவங்களை போய் பார்ப்பதற்கு செல்லவில்லை. ஆனால் உலகநாடுகள் முழுவதும் சுற்றி வருகிறார். ஏன் தமிழ்நாட்டில் சென்னை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான மழை வௌ்ள பாதிப்பின் போது எட்டி பார்க்கவேயில்லை. ஆனால் ஓன்றிய அரசு அதிகாாிகள் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், வந்து பார்வையிட்டு சென்றும் நிதி வழங்கவில்லை.
பிரதமர் மோடி மிகப்பொிய மகாநடிகர், 2014ல் தேர்தலின் போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவேன் என்று சொன்னார். ஆனால் 10 ஆண்டுகளில் 20 கோடிபேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும் வழங்கினாரா இல்லையே? கருப்பு பணத்தை மீட்டு ஓவ்வொருவருடைய கணக்கிலும் 15 லட்சம் வழங்குவேன் என்று சொல்லி ஏழை எளிய குடும்பத்தினர் உள்பட பலரையும் வங்கி கணக்கு தொடங்க சொல்லி அவா்களிடம் இருந்த பணத்தை இழந்தது தான் மிச்சம். இங்கு அண்ணாமலை என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு என்ன வரலாறு தொியும் தினமும் ஓரு பொய்யை சொல்லி திாிகிறார். இந்தியாவில் வேலை வாய்ப்பை உருவாக்காமல் பொய் செய்திகளை பரப்பும் தொழிற்சாலையை மோடி ஆரம்பித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு 400 தொகுதிகளை வெல்வோம் என்று சொன்னவர்கள் தற்போது எல்லாம் மாறிப்போய் கிடைக்கிறது. மோடி ஆட்சியில் எல்லோருக்கும் வேதனை தான் மிச்சம் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்ற உத்திரவாத்துடன் தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் முத்தான திட்டங்கள் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியோடு தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி களம் காண்கிறது. இந்த மாவட்டத்தில் பெய்த கனமழையின் காலத்தின் போது முட்டளவு தண்ணீர் சென்ற போது அதிலும் சென்று பணியாற்றிய அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி ஆகியோரை மனதார பாராட்டுகிறேன் உங்களுக்கு பணியாற்றி கவிஞர் கனிமொழிக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்று பேசினார்.
கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளா் துரை சந்திரசேகரன், நிர்வாகிகள் பொியார் தாசன், கலைமணி, ஆழ்வார், வள்ளி, அன்பழகன், கார்த்திகேயன், பாலமுருகன், சேகர், திருமலை குமரேசன், மதிவாணன், ஜெயா, புத்தன், செல்லத்துரை, ஆதிதமிழர்கட்சி மாவட்ட செயலாளர் நம்பிராஜ் பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் அகமது இக்பால், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், நிா்வாகிகள் நக்கீரன், சரவணன், முருகேசன், திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர் சுப்பையா, உள்பட பலா் கலந்து கொண்டனர். மாநகர திராவிடர் கழக மாணவரணி தலைவர் திரவியம் நன்றியுரையாற்றினார்.
பாக்ஸ்: மணிப்பூர் சம்பவத்தின் போது ராகுல்காந்தி, கனிமொழி எம்.பி, திருமாவளவன், உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த பல தலைவர்கள் நோில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மோடிக்கு அங்கு செல்வதற்குமட்டும் நேரம் கிடைக்க வில்லை. ஜீன் 3ம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞாின் 100வது பிறந்தநாள் விழா உள்ள நிலையில் ஜீன் 5ம் தேதி பிரதமர் மோடிக்கு வழியனுப்பும் விழாவும் புதிய இந்தியாவை வழிநடத்தும் அரசு அமையும் விழாவும் நடைபெறும் என்று கி.வீரமணி கூறினார்.
கருத்துக்கள்