advertisement

மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் போது நீட் விலக்கு அளிக்கப்படும் - தூத்துக்குடியில் கனிமொழி பேட்டி

மார். 21, 2024 5:03 முற்பகல் |

மத்தியில் நிச்சயம் மாற்றம் வரும். அப்போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து கட்டாயம் விலக்கு அளிக்கப்படும். என மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கனிமொழி எம்பி சென்னையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை காலையில் தூத்துக்குடி வந்தார்.  தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது:தூத்துக்குடி தொகுதி முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக, விளாத்திகுளம் சுற்றுவட்டாரங்களில், 361 கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கூட்டு குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக, திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. மத்தியில் நிச்சயம் மாற்றம் வரும். அப்போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து கட்டாயம் விலக்கு அளிக்கப்படும்.மக்களுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த அத்தனை மசோதாக்களையும் ஏற்றுக்கொண்டு அது வெற்றி பெறுவதற்காக அப்போது தமிழகத்தில் அதிமுக சார்பில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக வாக்களித்தார். மேலும், கடந்த முறை 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தும், தமிழகத்திற்கு எதுவும் செய்யத அவர்கள், திமுகவை பார்த்து கேள்வி கேட்பதற்கு எந்த தகுதியும் இல்லை என்றார்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement