advertisement

பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் வங்கி கணக்குகள் - தூத்துக்குடி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மார். 18, 2024 8:52 முற்பகல் |

வேட்பாளர்களின் வங்கி கணக்குகளில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பின் அது குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்தார்.. 

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கான கூட்;டம் இன்று (18.03.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற  தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி,  கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

 பணம் கொண்டும் செல்லும் வங்கி வாகனங்களில் வங்கிக் கடிதம் மற்றும் ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும் தேர்தல் பறக்கும் படை மற்றும் இதர ஆய்வு அலுவலர்களால் இவ்வாவணங்களை கோரும் போது சமர்ப்பிக்க வேண்டும். பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டையினை அணிந்திருக்க வேண்டும். வங்கிகள் சந்தேகத்திற்கு இடமான பணப் பரிமாற்றங்களை நிதி தொடர்பான புலனாய்வு முகமைகளுக்கு வழங்க வேண்டும். பத்து இலட்சத்திற்கு அதிகமான பண வைப்பிடு மற்றும் பணம் திரும்ப எடுத்தல் தொடர்பான பரிமாற்றங்களை வழங்க வேண்டும். வேட்பாளர்களின் வங்கி கணக்குகளில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பின் அது குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும். 

அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் புதிதாக வங்கி கணக்கு தொடங்க கோரும் போது உடனடியாக வங்கி கணக்கு தொடங்க உதவிபுரிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற பொது தேர்தல் 36, தூத்துக்குடி தொகுதியில் நல்ல முறையில் நடைபெற ஒத்துழைப்பு நல்கிட அனைத்து வங்கிகளிடமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கோரப்பட்டது என தெரிவித்துள்ளார்.      கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு மற்றும் வங்கியாளர்கள் கலந்துகொண்டனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement