advertisement

கோவில்பட்டி அருகே மனைவியை கொன்று விட்டு கணவர் தப்பியோட்டம்

ஜன. 04, 2024 5:27 முற்பகல் |

கோவில்பட்டி அருகே மனைவியை கொன்று விட்டு கணவர் தப்பியோடி உள்ளார்.

கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து(56). இவரது மனைவி மருதம்மாள்(54).  சம்பவத்தன்று காலையில் இன்னாசிமுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இன்னாசிமுத்து வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது, மருதம்மாள் ர உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது மட்டுமின்றி, அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது வீட்டின் உள்ளே இருந்த இன்னாசிமுத்து  தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் மருதம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை சம்பவம் குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர் 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement