ரத்தகறை படிந்த கத்தியை சிறுவன் சுத்தம் செய்த விவகாரம் - தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் விளக்கம்
ரத்தகறை படிந்த கத்தியை சிறுவன் சுத்தம் செய்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக டீன் பேட்டியளித்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் அதிகளவு நோயாளிகள் சிகிச்சைக்காக வருகை புரிகின்றனர். இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி காலில் வெட்டுப்பட்டு சிகிச்சைக்காக வந்த நிலையில் அவருடைய 11 வயது மகன் தனது தகப்பனாருக்கு சிகிச்சைக்கு பயன்படுத்திய ரத்தமும், சதையும் படிந்த கத்தரி மற்றும் கத்தியை கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் சிவக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரத்தகறை படிந்த கத்தி சிறுவன் கைகளுக்கு எப்படி சென்றது என தெரியவில்லை. இதற்காக தனியாக பணியாளர்கள் உள்ளனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துக்கள்