தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ஏப். 03, 2025 6:40 முற்பகல் |
தூத்துக்குடியில் ஏஎஸ்பி மற்றும் உதவி ஆய்வாளரை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் மற்றும், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் கடந்த 2 நாட்களாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஏப் 3 ம் தேதி) வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு தலைமை வகித்தார். இதில் வழக்கறிஞர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்