அதிமுக பாஜக கூட்டணி இராசியான மகத்தான கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக பாஜக கூட்டணி இராசியான மகத்தான கூட்டணி என திருநெல்வேலியில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”கேப்டனுக்கு ரொம்ப பிடித்தது திருநெல்வேலி அல்வாதான். திருநெல்வேலிக்கு முதன்முறையாக கேப்டன் இல்லாமல் வந்திருப்பது என்னை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கேப்டன் மறைந்த போது ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றிணைந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
எந்த ஆட்சியாளர்களும் தொலைநோக்கு பார்வையில் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மக்களுக்காக எங்களுடைய வேட்பாளர் கண்டிப்பாக உழைப்பார். மாநிலத்தில் ஆழம் திமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் மக்களுக்கான திட்டங்களை எதையும் செய்யவில்லை. திமுகவில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதலில் நிறைவேற்றாமல் இந்தியாவை காப்பாற்ற போகிறோம் என திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் சொல்லி வருகிறார். முதலில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள் முதல்வரே பிறகு நீங்கள் இந்தியாவை காப்பாற்றலாம் என தெரிவித்தார். பெ
2026-ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி அமைய இந்த கூட்டணியை மக்கள் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக இருக்க வேண்டும். இந்த கூட்டணி இராசியான கூட்டணி. அதிமுக நான்கு எழுத்து, தேமுதிக நான்கு எழுத்து, எஸ்டிபிஐ நான்கு எழுத்து என நான்கு கட்சிகள் சேர்ந்து மகத்தான கூட்டணி அமைத்துள்ளது. நான்காம் நம்பரில் உள்ள வேட்பாளர் ஜான்சிராணிக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். அதே போல தேர்தல் முடிவு வரப்போவது ஜூன் 4. உலகமே வியக்கும் வகையில் மகத்தான வெற்றியை ஜான்சிராணி பெறுவார்கள். வரும் காலத்திற்கு இந்த தேர்தலை பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும். திமுக அதிகார பலம் ஆட்சி பலத்தில் தேர்தலை சந்திக்கிறது. நாங்கள் மக்கள் பலத்தை நம்பி இந்த தேர்தலை சந்திக்கிறோம்” என அவர் தெரிவித்தார்
கருத்துக்கள்