பத்து ஆண்டுகளாக பணம் சேர்த்து விமானத்தில் பறந்த கிராம மக்கள்
பத்து ஆண்டுகளாக பணம் சேர்த்து விமானத்தில் அம்பை அருகே உள்ள கிராம மக்கள் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்துள்ளது வி.கே.புரம்.. இந்த பகுதியில் உள்ளதுதான் தாட்டான்பட்டி என்ற கிராமம்.. கிட்டத்தட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.. இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள்.. பெண்களும்கூட, விவசாயத்தில் இறங்கி உள்ளனர். மேலும் ராணுவம், காவல்துறை போன்ற அரசு துறைகளிலும் ஏராளமான இந்த கிராம இளைஞர்கள் சேவை புரிந்து வருகிறார்கள்.இதன்காரணமாக, ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்கள், அடிக்கடி விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து போவது வழக்கம். விமானம்: இளைஞர்கள் ஒவ்வொருமுறையும், இப்படி விமானத்தில் வந்துபோவதை பார்த்த தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் ஆசைவந்துவிட்டது..தாங்களும் எப்படியாவது ஒரு முறையாவது, விமானத்தில் பறந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.. இப்படி இவர்கள் ஆசைப்பட்டு பல வருடமாகிறது. ஆனாலும், பல காரணங்களால், அதை நிறைவேற்ற முடியவில்லை..
இதற்காக, பணத்தை கொஞ்சம் கொஞ்சம் சேமித்து, விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.. அதன்படியே சிறுக சிறுக சேமித்தும் வந்தனர். போதிய பணம் சேர்ந்ததும் பணத்தை எடுத்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக, விமானம் மூலமாக கோவா கிளம்பினர்.. அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட மொத்தம் 134 பேர் விமானத்தில் பறந்தனர்.. கோவாவிலுள்ள சவேரியாரை பார்வையிட்டனர்.. இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னதாக, ஃப்ளைட்டில் பறப்பதற்கு முன்பு, கிராம மக்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கருத்துக்கள்