விஜயகாந்த் அரசியலிலும் கேப்டன் தான் - திருச்சியில் பிரதமர் மோடி உருக்கம்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கேப்டனாக இருந்தார் என பிரதமர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜோதிராத்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர் கேஎன் நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து வணக்கம், எனது தமிழ் குடும்பமே என தனது உரையை தொடங்கிய பிரதமர் உங்கள் அனைவருக்கும் என புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி அப்போது 2023ஆம் ஆண்டின் கடந்த சில வாரங்கள் சிலருக்கு ரொம்பவே கடினமாக இருந்ததாக கூறினார். கனமழையால் பலர் உயிரிழந்ததாகவும், பெரும் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, விஜயகாந்த் சினிமா உலகில் மட்டுமன்றி அரசியலிலும் கேப்னாக இருந்தார் என்றும் புகழாரம் சூட்டினார். சினிமாவில் தனது நடிப்பின் மூலமும் தனது செயல்பாட்டின் மூலமும் ஏராளமான மக்களை இதயங்க்ளை வென்றுள்ளார் என்றும் எல்லாவற்றையும் விட தேசத்தை அவர் அதிகம் நேசித்தார் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் எம் எஸ் சுவாமிநாதன் மறைவுக்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அவரது மறைவும் வேதனையை ஏற்படுத்தியதாக கூறினார் பிரதமர் மோடி.
கருத்துக்கள்