நாகர்கோவிலில் பிப் 3 ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) நாகர்கோவில் வடசேரி மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக் னிக் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) நாகர்கோவில் வடசேரி மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக் னிக் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படித்த வேலை தேடுபவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது பணிக்காலியிடங்களை jobfairdeonagercoil@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 2-ந் தேதி மதியம் 2 மணிக்குள் அனுப்புமாறும், இம்மின்னஞ்சலில் அனுப்பும் நிறுவனங்களுக்கு CONFIRMATION MAIL அனுப்பப்படும் Confirmation Mail அனுப்பப்படும் நிறுவனங்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளமுடியும்.இதன் மூலம் இந்த சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலைதேடுபவர்களும், வேலையளிப்போர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்
கருத்துக்கள்