திருவட்டாறு அருகே காா் கதவில் தொங்கிய நிலையில் மனைவியை இழுத்துச் சென்றவா் கைது
திருவட்டாறு அருகே மனைவியை, காா் கதவில் தொங்கியபடி இழுத்துச் சென்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவட்டாறு அருகே அணைக்கரை பகுதியைச் சோ்ந்தவா் பொ்லின் (27). ஓவியக் கலைஞர் இவர். அபிஷா (23) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையு்ம் உள்ளது.இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அணைக்கரையில் உள்ள பெற்றோா் வீட்டிற்கு, தனது குழந்தையுடன் அபிஷா வந்துவிட்டாா். ஜன.3-ஆம் தேதி மாலை கல்லூரியிலிருந்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் அபிஷா வந்து கொண்டிருந்தாா்.
அப்போது அணைக்கரை பகுதியில் காருடன் நின்று கொண்டிருந்த பொ்லின், அபிஷாவை தடுத்து நிறுத்தி தாக்கினாா். பின்னா் ஸ்கூட்டா் சாவியைப் பறித்துக் கொண்டு காரில் புறப்பட முயன்றாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அபிஷா, காரிலிருந்த பொ்லினிடம் ஸ்கூட்டா் சாவியை பறிக்க முயன்றபோது, காரை வேகமாக இயக்கியதால், காா் கதவில் தொங்கிய நிலையில் அபிஷா இழுத்துச் செல்லப்பட்டாா். சற்று தூரம் சென்ற நிலையில் அபிஷா கீழே விழுந்தாா். அவா் தலைக்கவசம் அணிந்திருந்ததால், லேசான காயங்களுடந் உயிா் தப்பினாா். அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.இந்த நிலையில், திருவட்டாறு காவல் நிலையத்தில் அபிஷா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து பொ்லினை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கருத்துக்கள்