தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!
தமிழ்ப் புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும் என்றும், புதிய சாதனைகளை படைத்து வழி மறிக்கும் தடைகளை தகர்த்து வளமான தமிழ்நாட்டை படைத்திடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் தொழில்கள் சிறக்க வேண்டும் எனவும், அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலன்களும், வளங்களும் கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.சித்திரை திருநாளில் அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வாழ்த்துவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழ் புத்தாண்டு அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கருத்துக்கள்