தூத்துக்குடியில் அற்புதம் ஆயில் ஸ்டோர்ஸ் திறப்பு விழா
தூத்துக்குடியில் அற்புதம் குழுமத்தின் மற்றொரு உதயமாக பாளையங்கோட்டை ரோட்டில் இன்று (ஜனவரி 12ஆம் தேதி) அற்புதம் ஆயில் ஸ்டோர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட அற்புதம் ஆயில் ஸ்டோர்ஸ் திறப்பு விழா இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் லிமிடெட் இயக்குனர் மணிராஜ் தலைமை வைத்து திறந்து வைத்தார் . டாக்டர் ரவிச்சந்திரன் எம்.டி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நாசரேத் டயோசீசன் சீசன் பிஷப் தேவ சகாயம் ஜெபமும் ஆசீர்வாதமும் செய்தார்.
தொடர்ந்து அவர் பேசும் போது, இன்றைய உலகில் உணவு மிகவும் இன்றியமையாதது. அந்த உணவு ருசியாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் அமைய வேண்டுமானால் எண்ணெய் பங்கு முக்கியமாகும். அந்த வகையில் பொதுமக்களுக்கு நன்மை தரும் எண்ணெய் விற்பனை செய்யும் அற்புதம் ஆயில் ஸ்டோர்ஸ் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஜேம்ஸ்சுந்தர் சிங் (ஆர்த்தோ), ஆத்துார் மணி ஹோட்டல் குழும உரிமையாளர் M.தமிழ்செல்வன் , டாக்டர் p.அனிஷ் (எம்எஸ்),டாக்டர் சரத்குமார்( மயக்கவியல் நிபுணர்),,டாக்டர் மாரிமுத்து (ஆர்த்தோ),டாக்டர் பிரபு அலாய் (ஆர்த்தோ), டாக்டர் முத்துராமன் (ஆர்த்தோ).டாக்டர் N.கந்தசாமி (ஆர்த்தோ).வழக்கறிஞர் கிஸ்ஸிங்கர், SJV ரூபன்சிங் (அற்புதம் குழும மேலாளர்),J.ஜெபன் (அற்புதம் குழும நிர்வாக மேலதிகாரி) நியூட்டன் (மார்க்கெட் மேலாளர்), ஆர் சக்தி முருகன் (டூட்டி ஆன்லைன்) கி.ம சங்கர் (CEO மக்கள் டெய்லி செய்தி குழுமம்) அற்புதம் மருத்துவமனை, அற்புதம் மருந்தகம், அற்புதம் கார்டன்ஸ், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அற்புதம் ஆயில் ஸ்டோர்சில் தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் என தெரிவித்தனர்.
கருத்துக்கள்