advertisement

தூத்துக்குடி- முதல்வர் படைப்பகம் அமைய உள்ள இடத்தை மேயர் ஆய்வு

ஏப். 14, 2025 10:23 முற்பகல் |

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல்வர் படைப்பகம் அமைய உள்ள இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அவர் தெரிவிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்காக ஒரு அறிவார்ந்த சூழலை உருவாக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26ல் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். 

இந்த முதல்வர் படைப்பகமானது தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைய இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்று தெரிவித்தார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement